SCI Recruitment: இந்திய உச்ச நீதிமன்றம், நியூ டெல்லி, அறிவிப்பு எண் F.6/RC-2025 மூலம் Assistant Editor, Assistant Director (Ex-cadre), Senior Court Assistant (Ex-cadre), Assistant Librarian உள்ளிட்ட 22 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்கப்படும். பதிவு 23.02.2026 முதல் 08.03.2026 வரை நடைபெறும். விண்ணப்பிக்கும் முன் தகுதி நிபந்தனைகளை கவனமாக சரிபார்க்க வேண்டும்.
Contents
இந்திய உச்சநீதிமன்ற முக்கிய தகவல்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பு | இந்திய உச்ச நீதிமன்றம், நியூ டெல்லி |
| அறிவிப்பு எண் | F.6/RC-2025 |
| பணி வகை | மத்திய அரசு வேலை |
| பணியமர்த்தல் | நிரந்தர அடிப்படை |
| மொத்த காலியிடங்கள் | 22 |
| விண்ணப்ப தொடக்கம் | 23.02.2026 |
| விண்ணப்ப கடைசி தேதி | 08.03.2026 |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
காலியிட விவரம்
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| Assistant Editor | 05 |
| Assistant Director (Ex-cadre) | 01 |
| Senior Court Assistant (Ex-cadre) | 02 |
| Assistant Librarian | 14 |
| மொத்தம் | 22 |
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
| பதவி | கல்வித் தகுதி | அனுபவம் |
|---|---|---|
| Assistant Editor | சட்டப் பட்டம், கணினி அறிவு | 3 ஆண்டு வழக்கறிஞர் / நீதித்துறை / சட்ட ஆராய்ச்சி அனுபவம் |
| Assistant Director | Museology முதுகலை (முதல் வகுப்பு) | 5 ஆண்டு அருங்காட்சியக ஆராய்ச்சி அனுபவம் |
| Senior Court Assistant | Museology முதுகலை (55% மதிப்பெண்) | 2 ஆண்டு ஆராய்ச்சி / அருங்காட்சியக அனுபவம் |
| Assistant Librarian | Library Science பட்டம் + கணினி தகுதி | 2 ஆண்டு நூலக அனுபவம் |
வயது வரம்பு (08.03.2026 நிலவரப்படி)
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| Assistant Editor | அதிகபட்சம் 40 வயது |
| Assistant Director | 30 – 40 வயது |
| Senior Court Assistant | 35 வயது |
| Assistant Librarian | 30 வயது |
வயது தளர்வு
| பிரிவு | தளர்வு |
|---|---|
| SC/ST | 5 ஆண்டு |
| OBC | 3 ஆண்டு |
| PwBD (Gen/EWS) | 10 ஆண்டு |
| PwBD (SC/ST) | 15 ஆண்டு |
| PwBD (OBC) | 13 ஆண்டு |
| முன்னாள் இராணுவத்தினர் | அரசின் விதிமுறைப்படி |
சம்பள விவரம்
| பதவி | ஊதிய நிலை | அடிப்படை சம்பளம் |
|---|---|---|
| Assistant Editor | Level 12 | ₹78,800 + கொடுப்பனவுகள் |
| Assistant Director | Level 11 | ₹67,700 + கொடுப்பனவுகள் |
| Senior Court Assistant | Level 8 | ₹47,600 + கொடுப்பனவுகள் |
| Assistant Librarian | Level 8 | ₹47,600 + கொடுப்பனவுகள் |
தேர்வு முறை
| கட்டம் | விவரம் |
|---|---|
| 1 | எழுத்துத் தேர்வு |
| 2 | கணினித் தேர்வு |
| 3 | நேர்காணல் |
எழுத்துத் தேர்வு நடைபெறுவதற்கு முன், பொதுவாக 4 முதல் 7 நாட்களுக்கு இடையில், தகுதி சரிபார்க்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தேர்வு அழைப்புக் கடிதம் (Call Letter) வழங்கப்படும்.
இந்த அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்படாது. விண்ணப்பத்தின் போது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு அதிகாரப்பூர்வ இணைப்பு (link) அனுப்பப்படும். அந்த இணைப்பை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்கள் Call Letter-ஐ பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ள வேண்டும்.
Call Letter-ல் தேர்வு தேதி, நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு தொடர்பான முக்கிய வழிமுறைகள் போன்ற தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வு மையத்துக்கு செல்லும்போது, அச்சிடப்பட்ட Call Letter மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.
முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சல் பெட்டியை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். சில நேரங்களில் மின்னஞ்சல் Spam அல்லது Junk கோப்புறையிலும் இருக்கலாம். Call Letter இல்லாமல் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாது.
SCI Recruitment விண்ணப்பக் கட்டணம்
| விண்ணப்பதாரர் வகை | கட்டணம் |
|---|---|
| SC/ST/Ex-Servicemen/PWD | ₹750 |
| மற்றவர்கள் | ₹1,500 |
| கட்டணம் செலுத்தும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பதிவு 23.02.2026 முதல் 08.03.2026 வரை மட்டுமே திறந்திருக்கும்.
SCI முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
|---|---|
| விண்ணப்ப தொடக்கம் | 23.02.2026 |
| விண்ணப்ப கடைசி தேதி | 08.03.2026 |
இந்த இந்திய உச்சநீதிமன்ற ஆட்சேர்ப்பு, சட்டம் மற்றும் நூலகத் துறையில் தகுதி பெற்றவர்களுக்கு சிறந்த வாய்ப்பு. கடைசி தேதியை தவறவிடாமல் விண்ணப்பிக்குங்கள்.