TNTET 2026 – பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக Teachers Recruitment Board, Tamil Nadu (TRB) மூலம் TNTET 2026 அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, அரசு விதிமுறைகளின்படி ஆசிரியர் தகுதி நிலையை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக Secondary Grade Teacher (SGT), BT Assistant, BRTE, Special Education Teacher மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் 01.09.2025 அன்று அல்லது அதற்கு முன் நியமனம் பெற்றவர்கள் இந்த TNTET தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவர்.
இந்த TNTET தேர்வு புதிய நியமனத்திற்கான தேர்வு அல்ல. ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் அரசின் தகுதி நெறிமுறைகளை பூர்த்தி செய்யவும், பணிநிலையை நிலைநிறுத்தவும் இந்தத் தேர்வு அவசியமானதாகும். எனவே தகுதி பெற்ற ஆசிரியர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மற்றும் தேர்வு விவரங்களை கவனமாகப் பார்த்து குறிப்பிட்ட காலத்திற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Contents
முக்கிய தகவல்கள்
-
தேர்வு பெயர்: TNTET 2026 (Working Teachers)
-
அமைப்பு: Teachers Recruitment Board (TRB)
-
பணியிடம்: தமிழ்நாடு
-
விண்ணப்ப முறை: ஆன்லைன்
-
தேர்வு வகை: தகுதித் தேர்வு (Eligibility Test)
முக்கிய தேதிகள்
-
அறிவிப்பு வெளியீடு: 13 பிப்ரவரி 2026
-
ஆன்லைன் விண்ணப்ப தொடக்கம்: 18 பிப்ரவரி 2026
-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10 ஏப்ரல் 2026
-
திருத்தம் செய்யும் காலம்: 11 – 13 ஏப்ரல் 2026
-
Paper I தேர்வு தேதி: 04 ஜூலை 2026 (தற்காலிகம்)
-
Paper II தேர்வு தேதி: 05 ஜூலை 2026 (தற்காலிகம்)
விண்ணப்பக் கட்டணம்
-
பொது பிரிவு: ரூ.600 (ஒரு Paperக்கு)
-
SC / SCA / ST / மாற்றுத்திறனாளிகள்: ரூ.300 (ஒரு Paperக்கு)
தகுதி நிபந்தனைகள்
-
01.09.2025 அல்லது அதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியராக இருக்க வேண்டும்.
-
SGT, BT Assistant, BRTE, Special Education Teacher மற்றும் சமமான பணியிடங்கள் பொருந்தும்.
-
கல்வித் தகுதி National Council for Teacher Education (NCTE) விதிமுறைகளின்படி இருக்க வேண்டும்.
தேர்வு முறை
-
OMR அடிப்படையிலான எழுத்துத் தேர்வு
-
Paper I / Paper II தனித்தனி தேர்வுகள்
-
மொத்தம் 150 கேள்விகள் – 150 மதிப்பெண்கள்
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள்
-
பொது பிரிவு: 60% (90 மதிப்பெண்கள்)
-
BC / BCM / MBC / DNC / மாற்றுத்திறனாளிகள் – குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்: 50% (75 மதிப்பெண்கள்)
-
SC / SCA / ST: 40% (60 மதிப்பெண்கள்)
தேவையான ஆவணங்கள்
-
சமீபத்திய புகைப்படம் (40–60 KB)
-
கையொப்பம் (20–40 KB)
-
Service Certificate (Annexure-I)
-
கல்விச்சான்றிதழ்கள்
-
சமூகச்சான்றிதழ் (தேவையானால்)
-
பிற ஆதார ஆவணங்கள் (PDF – 250 முதல் 300 KB)
TNTET 2026 – ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ?
-
முதலில் Teachers Recruitment Board, Tamil Nadu (TRB) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
-
முகப்பு பக்கத்தில் TNTET 2026 – Working Teachers என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
-
அறிவிப்பை முழுமையாக வாசித்து தகுதி விவரங்களை சரிபார்க்கவும்.
-
புதிய பயனராக இருந்தால், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
-
பதிவு செய்த Login விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.
-
விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகுதி மற்றும் பணிவிவரங்களை சரியாக நிரப்பவும்.
-
தேவையான ஆவணங்கள் (புகைப்படம், கையொப்பம், Service Certificate மற்றும் பிற சான்றுகள்) குறிப்பிடப்பட்ட அளவில் upload செய்யவும்.
-
தேர்வு கட்டணத்தை ஆன்லைன் payment மூலம் செலுத்தவும்.
-
அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
-
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய அறிவுறுத்தல்கள்
-
Paper I மற்றும் Paper IIக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
-
ஒவ்வொரு Paperக்கும் தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
-
தேர்வு Offline OMR முறையில் நடைபெறுமவிண்ணப்ப திருத்தம் 11–13 ஏப்ரல் 2026 மட்டுமே அனுமதி.
-
விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படாது.